* தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
*கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
* பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.
* எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.
* தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.
* நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
* முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும். * இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.