சமையலுக்கு மேலும் சுவை கூட்ட ஒருசில டிப்ஸ் part 2

சமையலுக்கு மேலும் சுவை கூட்ட ஒருசில டிப்ஸ் part 2

Published on
எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.
பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.
தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.
கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.
தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories/a-few-tips-to-make-cooking-more-delicious-918

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com