சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்

சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்

Published on
உருளைக்கிழங்கை வேக வைத்து பிரிட்ஜில் வைத்திருந்தால், தேவைக்கு எடுத்து உடனடியாக சமையலுக்கு பயன்படுத்தலாம்.
சர்க்கரை பாகு தயாரிக்கும் போது அதில் சிறிதளவு பால் சேருங்கள். பாகு கரிய நிறம் ஆகாது.
கடலை, பயறு வகைகளை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து விடுங்கள். சீக்கிரம் வெந்துவிடும். சமைக்கும் நேரமும் மிச்சமாகும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பால் பவுடரும் கலந்தால், சப்பாத்திக்கு நல்ல கவை கிடைக்கும்.
சப்பாத்தி மாவில் சிறிதளவு மோர், சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவை கலந்தால், சப்பாத்திக்கு வித்தியாசமான ருசி கிடைக்கும்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை செய்து இறக்கியதும், அதில் அரை டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்துவிட்டால் சுவை கூடும். ஆறினாலும் அதிகம் கெட்டியாகாது. நெய்யும் குறைவாகச் சேர்க்கலாம்.
கொய்யா மர இலைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பலகாரம் செய்யத் தொடங்கும் முன் ஒருமுறை போட்டு எடுத்துவிட்டால் எண்ணெய் வாணலியிலிருந்து பொங்கி வழியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com