குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.
வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
பெரிய வெங்காயத்தை வட்டவட்டமாக நறுக்கி பஜ்ஜி போடுவோம். அதற்கு பதிலாக சாம்பார் வெங்காயத்தை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி பஜ்ஜி மாவில் தோய்த்து மினி பஜ்ஜிகளாக செய்யலாம். சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு குழைந்து போகாமல் இருக்க ஒரு டிபன் பாக்ஸில் போட்டு குக்கரில் வேகவைத்தால் போதும்.
எல்லா காய்கறிகளையும் சிறிது சிறிதாக நறுக்கி, தயிர், உப்பு, சீரக பொடி சேர்த்தால் காய்கறி பச்சடி சுவையாக இருக்கும்.