நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது
இந்நிலையில் சிம்பு மலையாள இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.