சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய நடிகர் வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன்.
சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இதனை பாா்த்த நடிகர் சிலம்பரசன் தனது உதவியாளரை அனுப்பி நேரில் ஆறுதல் கூறி ரூ 2 லட்சம் வழங்கி உள்ளார். உதவியை பெற்ற வெங்கல் ராவ் நடிகர் சிம்புவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.