நாயகன் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்
இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்
அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியதாகவும், நடிகர் சிம்பு இதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது
இந்நிலையில் தற்போது படத்திலிருந்து விலகிய துல்கர் மற்றும் ஜெயம்ரவி மீண்டும் இணைந்துள்ளதாகவும் மேலும் சிம்பு இதில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.