நாயகன் படத்திற்கு பிறகு, நடிகர் கமல் இயக்குனர் மணிரத்னம் இணையும் படம் “தக் லைஃப்”
கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக் போன்றோர் நடித்துள்ளனர்
கால்ஷீட் பிரச்சனை காரணமாக, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி அடுத்தடுத்து இப்படத்தில் இருந்து விலகினர்
இந்நிலையில் சிம்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் படக்குழு அவரிடம் பேசி வருகிறது
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும், விரைவில் படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது