நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின.
மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று, இருவரும் தெலுங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனா்.
சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.