பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். தனது 14வது வயதிலியே நடிக்க ஆரம்பித்த இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்
இவர் 2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் முதலியவற்றை வென்றுள்ளார்
டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'
இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சமந்தா விலகிய நிலையில் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் தற்போது ஸ்ருதி ஹாசனும் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டு வருகிறது