மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இவர் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளனர்.
அதாவது, ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.