இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம்பிடித்துள்ளார். 2024 ஹூருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.
இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி ஆகும்.