தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார்
இவர் எழுதி, இயக்கி, நடித்து வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல் கல்லாக அமைந்தது
இந்த நிலையில், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார்
மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வெப் சீரிசில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.