தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது அவரது 150-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என் பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
காவல்துறை அதிகாரியான சரத்குமார் மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை காட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.