பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
படத்தின் இசையமைப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இசை மிகப் பெரியளவில் ஹிட்டானது.
இந்த படத்தின் பின்னணி இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் காலடி தடத்தை பதிக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன்