11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் ”யாவரும் வல்லவரே”
இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கின்றனர்
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், ரித்விகா, தேவதர்ஷினி போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், பிரபு திலக், "வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து எங்களின் "யாவரும் வல்லவரே" படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்
ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. என்று தெரிவித்தார்