தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு தாய்மை அடைய வேண்டும் என்பது கனவு. அந்த உணர்வை பெற வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். தாயாவதற்கு வயது தடையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.