பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னிஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.