அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டான்
இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிக மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.