மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்
இதில் அர்ஜூன்தாஸ், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்
இத்திரைப்படம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓடிடி தளம் வாங்கியுள்ளது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் ரசவாதி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.