பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.
இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா எடுத்த புகைப்படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.