நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வி.ஜே ரக்ஷன் இப்படத்தில் ரஜினிகாந்தின் குடும்பத்தில் ஒருவனாக நடித்து இருந்தார். ஒரு டெக் , சோஷியல் மீடியா எக்ஸ்பர்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரக்ஷன் அவரது இன்ஸ்டா வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஃபேன் பாயாக இருந்தவன் இப்பொழுது ஃபேமிலி பாய்.
நீங்கள் காட்டும் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என படத்தில் நடித்த காட்சிகளில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.