ராஜாகிளி என்ற புதிய படத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ராஜாகிளி திரைப்படம் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.