நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது
புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது
தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.