தமிழில் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் பிரியாமணி இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார்
இந்நிலையில் தென்னிந்திய நடிகைகள் இந்தி திரை உலகில் பணிபுரியும்போது ஏற்படும் சவால்கள் பற்றி அவர் கூறியபோது,
இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள்
இந்த நிலை மாறவேண்டும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவராலும் அனைத்து மொழி சினிமாவிலும் நடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இந்திய நடிகர்களாக பார்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்