தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்
45 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்புவது உண்டு
இந்நிலையில் சமீபத்தில் பிரேம்ஜி யின் திருமண அழைப்பிதல் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் பிரேம்ஜி கல்யாண தகவல் உண்மை எனவும் பெண் சினிமா துறையை சார்ந்தவரல்ல எனவும், மேலும் எளிமையாக திருமணத்தை நடத்த இருப்பதாகவும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.