நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
2021-22ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
'அந்தகன்' படம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு தங்கலான், டிமாண்டி காலணி 2 வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னரே 'அந்தகன்' படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.