ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்
தொடர்ந்து நவீன கால காதலை காமெடி பாணியில் சொல்லும் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றார்
இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ. சி படத்தில் நடித்து வருகிறார் இதில் கீர்த்தி ஷெட்டி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்து, “ஓ மை கடவுளே” படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் படம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது