'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் 'தி ராஜா சாப்'
பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மாருதி இயக்க இருக்கிறார். பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி மீண்டும் இணையும் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது
இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது
விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். 'தி ராஜா சாப்' முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது