சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
இந்நிலையில் 2024-ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போது தயாராகி வருகிறது
டிசம்பர் 31-ந் தேதி இரவு முதல் நள்ளிரவு வரை வர்த்தக சபை, பாண்டி மெரீனா, அசோகா பீச் ரெசார்ட், ஓட்டல்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு குறைந்தபட்சமாக ரூ 1000 முதல் அதிகபட்சமாக ரூ 5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச்ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலா பயணிகள் வேகமாக முன் பதிவு செய்து வருகின்றனர்