பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அவரை பார்த்து உற்சாகமாக கையசைத்து கொண்டே இருந்தான்
இதைக் கவனித்த மோடி அந்த சிறுவனிடம் "மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக்கொள் இல்லாவிட்டால் கை வலிக்கும்" என்றார்
பிரதமர் மோடி சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த மக்களை கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.