இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
ஒரு காம்பவுண்டில் வாடகைக்கு வசித்து வரும் இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது
சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது
இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டு இந்தியாவில் 5 மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது
அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது இது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.