மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் படை தலைவன் படத்தில் நடித்துள்ளார்.
"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியீட்டு தெரிவித்துள்ளனர்.