அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆலிவ்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதை தடுத்து நிறுத்துகின்றன.
ஆலிவ்களில் நல்ல வகையான கொழுப்பு உள்ளது. இதில் இருக்கும் ஒலிக் அமிலம் வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வைட்டமின்-E மற்றும் பாலிபினால்களுடன் சேர்ந்து வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காயங்களுக்கு எதிராக போராடுகின்றன.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஹைட்ராக்சிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது. இது எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை புரோபயாடிக் ஆற்றலை கொண்டுள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. மேலும் ஆலிவ் புளிப்பு தன்மை கொண்டுள்ளதால் குடலுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.
இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கும்.
ஆலிவ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.
மூளை பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது. ஆலிவ் உட்கொள்வது மூளை உயிரணு இறப்பை தடுக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலிவ்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் உதவுகின்றன. சருமத்தை புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
கருப்பு பழுத்த ஆலிவ், பச்சை ஆலிவ், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் என பல்வேறு வகையான ஆலிவ் பழங்கள் உள்ளன.
ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். ஆலிவ் பழங்களை சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆலிவ் பழத்திற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 ஆலிவ் பழங்கள் வரை சாப்பிடுவது நல்லது.