நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.
சுவையாக இருப்பதுடன், தோலின் வறட்சியைப் போக்கும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும் மற்றும் செல் அழிவைத் தடுக்கும் பணிகளைச் செய்கிறது.
இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் B-6, K, அயோடின், செலினியம் போன்ற சத்துப்பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்கின்றன.
தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C, தையமின், ரிபோபிளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் A, டோக்கோபெரால், வைட்டமின் K போன்ற வைட்டமின்களும்
செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
5 பழங்களில் 250 மி.லி. அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன.
இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
பருவப் பெண்கள் முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரி, சிறப்பான மருந்து.