பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', விஜய்யின் 'பீஸ்ட்' , ரஜினியின் 'ஜெயிலர்' போன்ற படங்களை இயக்கினார் .
'ஜெயிலர்' திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. அதனை தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
பின்னர் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.