F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
டீசர் மக்களின் கவனத்தை பெற்ற நிலையில், முதல் பாடலான ஹையோடி பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது
கிருத்திகா நெல்சன் வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ள ஹையோடி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.