தமிழக முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்
அதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு என்றும் தெரிவித்திருந்தார்
இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இதுகுறித்து நடிகர் டி.ராஜேந்தர் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு அவர் “ அரசியல் என்பது பொது வழி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துக்கள். அவரைப்பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம் நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம் என்று பதிலளித்துள்ளார்.