லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் வரும் லோகேஷ் கனகராஜ், அவரது படங்களில் வழக்கமாக வரும் துப்பாக்கி, பவுடர் என எதுவும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.