தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார்.
2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதன்படி செல்வராகவன் இயக்கும் 'மெண்டல் மனதில்' எனும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறார்.இதில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் பூஜையுடன் படபிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.