தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்
ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களைத் திருமணம் செய்து கொள்வது மிக சகஜமான ஒரு விஷயம் ஆகிவிட்டது.
இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகன் சாய் விஷ்ணு என்பவரை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடை வலைதள பக்கத்தில் அவரிடைய நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்து அதில், தன்னுடைய ஆசை நிறைவேறியதாக' தெரிவித்துள்ளார்