நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி."
இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அஜித் கார் ரேசில் ஈடுபடும் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள AK Anthem வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித் குமாரின் மாஸ் புகைப்படங்கள், அனிமேஷன் காட்சி மற்றும் Anthem பாடல் அடங்கிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.