சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.
யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
"மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார்.
"மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.