கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும்,
மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் இந்தியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.