மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். சினிமாவை தாண்டி இன்னொரு புறம் இவர் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்
படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு.
அந்த வகையில் அவர் எடுத்த புல்புல் பறவையின் படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் ஏலத்திற்கு விடப்பட்டது
1லட்சத்தில் ஆரம்பித்து அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். இச்செய்தி தற்போது வைரலாகி வருகிறது.