மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது
அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார்.