வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
ஒரு சாதாரண வங்கி ஊழியர் சில சூழ்நிலைக்காரணமாக பெரும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
பிறது அதுவே ஒரு சிக்கலாக உருவாகிறது. இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.
மிக சுவாரசியமான டிவிஸ்ட் மற்றும் எதிர்ப்பாராத காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.