லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்
அதில் முதல் சில படங்களை தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் கதையை தேர்வு செய்து தயாரிக்க போவதாக கூறியிருந்தார்
அதன்படி அபாஸ் ஏ ரகுமான் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபைட் கிளப்' படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டது
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தன்னுடன் பணியாற்றிய ரத்ன குமார் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்
மேயாத மான், ஆடை, குலுகுலு போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமாரின் இந்த படத்தில் நடிக்க லாரன்ஸ் மற்றும் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.