ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 'வேட்டையன்' படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்