பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில். தற்பொழுது படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிவெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.